தமிழ் போற்றும் நல் தமிழர்க்கு
தமிழை தந்த தமிழனுக்கு
தமிழை காக்கும் நல் மக்கள்க்கு
தமிழின் வந்தனம்
நான் புதியவன் என்றும் புதியவன்
தமிழுக்கு நான் என்றும் புதியவன்
நான் கைகுழந்தை -பாதை தெரியாத மழலை
நலத்தை நோக்கி வந்தேன் வழி தெரியாமல் .
காக்கும் கரங்கள் உண்டு காதுவழி செய்தி
காப்பவள் யாரோ காண்பவர் யாரோ
கண்கள் பனித்தன கால்கள் எடறின
கை தந்தவள் காக்கும் தாய் -அம்மா !